தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது குறித்து பாலிவுட் நடிகர் பாபி தியோல் அளித்துள்ள பேட்டி தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜன நாயகன்' படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ள பாபி தியோல், சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இணைந்து நடித்த தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் குறித்து நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்தெந்த தென்னிந்திய நடிகர்களுடன் இணைந்து நடிக்கிறேனோ, அவர்கள் அனைவரும் அரசியலில் ஈடுபட்டு அமைச்சர்களாக மாறுவதாகக் குறிப்பிட்ட அவர், நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோருடன் பணியாற்றிய அனுபவங்களையும் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்.








