Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஹீரோவாக அறிமுகமாகிறாரா லோகேஷ் கனகராஜ்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஹீரோவாக அறிமுகமாகிறாரா லோகேஷ் கனகராஜ்?

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து பல படங்களைக் கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்து பணிபுரிந்துள்ளார் லோகேஷ். கூலி படத்தை முடித்தவுடன் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகத் தகவல் கூறுகின்றனர்.

இவ்வேளையில் இயக்குநராகக் கலக்கி வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடி கதைக் களத்தில் லோகேஷ் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்திற்காகத் தற்போது தற்காப்புக் கலைப் பயிற்சியை லோகேஷ் கற்றுக் கொண்டு இருப்பதாக ஆகக் கடைசித் தகவல் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஒரு புறம் இருக்க, தற்காப்புக் கலைப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →