Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கார்த்தி 29 படம் குறித்த தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கார்த்தி 29 படம் குறித்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான கார்த்தி, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பருத்திவீரன் படத்தில் தொடங்கிய இவரது பயணம் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம், கைதி, தீரன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல ஹிட் படங்கள் வெளியானது.

கடைசியாக கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது,சர்தார் 2 மற்றும் வா வாத்தியாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. அடுத்ததாக தனது 29வது படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். அப்படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கவுள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜெயராம், நிவின் பாலி ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இலங்கை - ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →