Oct 10, 2026
Thisaigal NewsYouTube

தடை செய்யப்பட்ட சின்மயிக்கு வாய்ப்பு வழங்க எண்ணும் பிரபல இசையமைப்பாளர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தடை செய்யப்பட்ட சின்மயிக்கு வாய்ப்பு வழங்க எண்ணும்  பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா ரசிகர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்களோ அதைப் போலவே படப் பாடல்களை ரசிப்பார்கள். இதனாலேயே பாடலில் ஒரு பகுதியை மட்டும் மாஸ் நடனத்துடன் அமைத்து அதையே விளம்பரத்திற்காகக்ப் பயன்படுத்தி படங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி சமீபத்தில் தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடல் பாட அது பரபரப்பாகப் பேசப்பட்டது.

சின்மயி பாடியதை கேட்டதும் இவருக்கு ஏன் தடை விதித்துள்ளார்கள் என ரசிகர்களே கோபம் அடைந்துள்ளார்கள். சின்மயி பாடிய தக் லைஃப் பட பாடல் யூடியூபில் செம டிரெண்டிங்கில் எல்லாம் இடம் பிடித்தது. தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஒரு பிரபலம் சின்மயியைக் கண்டிப்பாக பாட வைப்பேன் எனக் கூறியுள்ளார்.

அவர் விஜய் ஆண்டனி தான். ஒரு பேட்டியில் அவர், நான் விரையில் படங்களுக்கு இசையமைக்க உள்ளேன். அதில் கண்டிப்பாகச் சின்மயியை பாட வைப்பேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →