Oct 11, 2026
Thisaigal NewsYouTube

‘டூரிஸ்ட் பேமிலி' படத்தைப் பார்த்துப் பாராட்டிய பிரபல இயக்குனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘டூரிஸ்ட் பேமிலி' படத்தைப் பார்த்துப் பாராட்டிய பிரபல இயக்குனர்

அண்மையில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்தை இயக்குனர் எஸ். எஸ். ராஜமௌலி பாராட்டிப் பேசியுள்ளார்.

மே 1ஆம் தேதி வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய படங்கள் வெளியாகிய பிறகும், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கு இன்னும் முன்பதிவு சிறப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யைப் பார்த்த பிரபல இயக்குனர் ராஜமௌலி, “இது ஒரு அற்புதமான திரைப்படம். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஆரம்பம் முதல் முடிவு வரை ஆரோக்கியத்தை தூண்டும் அனுபவமாக இருந்தது. இயக்குனர் அபிஷன் ஜீவிந் சிறப்பாக எழுதி, அழகாக இயக்கியுள்ளார். அண்மையில் நான் பார்த்த சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. இப்படத்தை அனைவரும் தவறாமல் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, தனது மனம் நெகிழ்ந்த விதத்தில் அபிஷன் ஜீவிந் தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குனர் ராஜமௌலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →