Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்

இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா. இவருக்கு தற்போது 89 வயது ஆகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் இவர் இறந்து விட்டதாகத் தகவல் வெளி வந்தது.

ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது என தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தெரிவித்தார்.

இந்த நிலையில், பாலிவூட்டில் பல சாதனைகளைப் படைத்த நடிகர் தர்மேந்திரா 89 வயதில் காலமானார். இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர் பதிவு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.

தர்மேந்திராவின் மறைவு பெரும் துயரத்தை திரையுலகில் உள்ளவர்களுக்கு அளித்துள்ளது. ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →