Oct 5, 2026
Thisaigal NewsYouTube

AK 64: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
AK 64: இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறிய தகவல்

அஜித் ரசிகர்கள் அனைவரும் AK 64 படத்தின் தகவல் எப்போது வெளிவரும் என்றுதான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் - அஜித் கூட்டணி இப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது.

முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். அஜித் தனது கார் பந்தயத்தை முடித்து வந்தவுடன் படம் குறித்து தகவல் வெளிவரும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், விருது விழா ஒன்றில் AK 64 படத்தின் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஆதிக். அதாவது இப்படம் குறித்த விவரம் இந்த மாதம் இறுதிக்குள் வெளிவரும் என அவரே கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →