Oct 9, 2026
Thisaigal NewsYouTube

கூலி திரைப்படத்தின் இசை வெளியீடு எப்போது?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கூலி திரைப்படத்தின் இசை வெளியீடு எப்போது?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 27ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →