Apr 18, 2026
Thisaigal NewsYouTube
தொடர் அப்டேட்டுகளை கொடுக்கும் எல்ஜிஎம் படக்குழு
சினிமா

தொடர் அப்டேட்டுகளை கொடுக்கும் எல்ஜிஎம் படக்குழு

Share:

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் டோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் டோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'எல்.ஜி.எம்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை தோனி மற்றும் சாக்ஷி தோனி இன்று (10.07.2023) வெளியிடவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் பெற்றுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

தனுஷின் 'D55': சாய் அபயங்கரின் அதிரடி இசைக்கோர்ப்பு - வைரலாகும் புதிய புகைப்படம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: தமிழ் திரையிசையில் கம்யூனிசச் சிந்தனைகளின் அழியாத சுவடுகள்

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

டிஸ்னி சினிமாகான் 2026: 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' மற்றும் 'ஸ்டார் வார்ஸ்' குறித்த அதிரடி அறிவிப்புகள்!

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்: சரணடைய காவல்துறை கெடு

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

விக்னேஷ் ராஜா - நீ ஒரு மேதை': 'காரா' படத்தைப் பார்த்து வியந்த தனுஷ்

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து

மலேசியாவில் மீண்டும் 'தீனா': அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்குப் பிரம்மாண்ட விருந்து