Oct 11, 2026
Thisaigal NewsYouTube

‘கூலி’ பட நடிகர் ‘ஜெயிலர் 2' படத்திலும் நடிக்கிறாரா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
‘கூலி’ பட நடிகர் ‘ஜெயிலர் 2' படத்திலும் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2’ திரைப்படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் சிறப்பு தோற்றத்திலும், முக்கியக் கதாப்பாத்திரங்களிலும் நடிக்கும் நிலையில், 'கூலி' படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் பெரிய நடிகர் ஒருவரும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில், முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ஷாக்கி ஷெராப் ஆகியோர் 'ஜெயிலர் 2’ படத்திலும் அதிக வாய்ப்பு இருப்பதாக அறியப்படுகிறது.

அது மட்டுமின்றி, பிரபல தெலுங்கு மாஸ் ஹீரோ பாலையாவும் 'ஜெயிலர் 2’ படத்தில் நடிக்க இருப்பதாகவும், இது குறித்த பேச்சுவார்த்தையும் முடிந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதோடு, எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும், முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 'கூலி' படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் நாகார்ஜுனா, இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →