Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ஜாக்கி சானுடன் இணைகிறாரா சிம்பு?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜாக்கி சானுடன் இணைகிறாரா சிம்பு?

சிம்பு கைவசம் தற்போது மூன்று திரைப்படங்கள் உள்ளன. பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அவர் தனது 49வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் STR 50 உருவாகவுள்ளது. மேலும் டிராகன் பட இயக்குநரின் இயக்கத்தில் STR 51 படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில், சிம்புவின் மற்றொரு புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் 2018 எனும் மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தவர் இயக்குநர் ஜூட் ஆண்டனி. இவர் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில், அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில், விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் எனக் கூறப்படுகிறது. ஆனால், அனைவரையும் ஆச்சரியமடையும் விதமாக இப்படத்தில் உலக புகழ்பெற்ற நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர்தான் நடிகர் ஜாக்கி சான் தான்.

ஆக்‌ஷனில் பல சாதனைகளைப் படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →