Sep 7, 2026
Thisaigal NewsYouTube
'தளபதி' விஜய்யின் 'ஜென நாயகன்' மலேசியாவில் ரூ.3 மில்லியன் வசூல் சாதனை
சினிமா

'தளபதி' விஜய்யின் 'ஜென நாயகன்' மலேசியாவில் ரூ.3 மில்லியன் வசூல் சாதனை

Share:

மலேசியாவில் வெளியான நடிகர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜென நாயகன்' திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே முன்கூட்டிய டிக்கெட் விற்பனை மூலம் ரூ.3 மில்லியன் வசூலைக் குவித்து சாதனை படைத்துள்ளது.

மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தால் விநியோகம் செய்யப்பட்ட இப்படம், நாடு முழுவதும் 134 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மலேசியாவில் உள்ள தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் மற்றும் விஜய்யின் மீது அவர்கள் கொண்டுள்ள நீங்காத அன்பை இந்த பிரம்மாண்ட வசூல் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related News