Jul 21, 2026
Thisaigal NewsYouTube
வாரணாசி படத்தின் மொத்த பட்ஜெட்
சினிமா

வாரணாசி படத்தின் மொத்த பட்ஜெட்

Share:

இயக்குநர் ராஜமௌலி புகழ் பெற்ற இயக்குநர்களில் ஒருவராகியிருக்கிறார். இவருடைய இயக்கத்தில் படம் வெளியாகிறது என்றால் கண்டிப்பாக உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் பிரமாண்டத் திரைப்படம் வாரணாசி. மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

அண்மையில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக ரூ. 25 கோடி செலவு செய்ததாகத் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்திய சினிமாவின் பெருமைக்குரிய படமாக உருவாகி வரும் வாரணாசியின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை ரூ. 1,200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் சம்பளம் வாங்கவில்லையாம். படத்தின் லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக் கொள்வார்கள் என்கின்றனர்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்