Jul 21, 2026
Thisaigal NewsYouTube
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம்
சினிமா

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த முதல் படம்

Share:

தனது இசையால் பல கோடி மனதில் இடம் பிடித்தவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கொம்புசீவி.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் ஷண்முக பாண்டியன் நடித்துள்ளார். மேலும் சரத்குமார் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்ட யுவன், தனது முதல் படம் அரவிந்தன் இல்லை கேப்டன் நடித்த படம்தான் எனக் கூறியுள்ளார்.

"கேப்டன் திரைப்படங்களைப் பார்த்துதான் எனக்கு பயணத்தைத் தொடங்கினேன். கேப்டனுடன் எனது முதல் படம் தென்னவன். ஆனால், அதற்கு முன்பே அலெக்ஸாண்டர் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்படத்திற்கு எனது அண்ணன் கார்த்திக் ராஜாதான் இசையமைத்து வந்தார். ஆனால், திடீரென அவர் மும்பை கிளம்பிச் சென்றதால், இப்படத்திற்கான மறுப் பதிவு பணிகளை நான் செய்தேன். அதுதான் எனது முதல் படம்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது கேப்டன் எங்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருக்காக நான் நடனமாடிக் காட்டியிருக்கிறேன். இயக்குநர் பொன்ராம் எப்போது இந்த படம் கூறி ஹீரோ ஷண்முக பாண்டியன் என சொன்னாரோ, படத்தின் கதையை நான் கேட்கவில்லை, உடனடியாக நான் இசையமைக்கிறேன் எனக் கூறி விட்டேன். ஏனென்றால் அவருக்கு என் குடும்பத்தில் ஒருவர். நான் பொதுவாக மேடைகளில் அதிகமாக பேசமாட்டேன். ஆனால், இப்போது பேசுகிறேன் என்றால் அது கேப்டனுக்காகத்தான்" எனக் கூறினார்.  

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்