Oct 2, 2026
Thisaigal NewsYouTube

சிவகார்த்திகேயன் படத்திற்காக ஒன்றிணையும் ரஜினியும் கமலும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிவகார்த்திகேயன் படத்திற்காக ஒன்றிணையும் ரஜினியும் கமலும்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளி வரவிருக்கும் திரைப்படம் பராசக்தி. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப், ராணா டகுபதி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன. விரைவில் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.

ஜனவரி மாதம் 14ஆம் தேதி பராசக்தி படம் வெளிவரவிருக்கும் நிலையில், அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஜனவரி மாதம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் புதிதாக வெளியாகியுள்ள தகவல் என்னவென்றால், பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →