Jun 30, 2026
Thisaigal NewsYouTube
அஜித் எடுத்த அதிரடி முடிவு
சினிமா

அஜித் எடுத்த அதிரடி முடிவு

Share:

நடிகர் அஜித்தின் AK 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றுதான் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளி வந்தது. மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என கூறப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்த நிலையில், அது நடக்கவில்லை. படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு கடும் வருத்தத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில், 2027ஆம் ஆண்டு வரை அஜித் எந்த திரைப்படத்திலும் நடிக்கப் போவதில்லை என தெரிய வந்துள்ளது. காரணம், 2026 மார்ச் மாதம் முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பல்வேறு நாடுகளில் அஜித் குமார் கார் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளார்.

இதனால் இந்த ஆண்டு AK 64 படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர். ஆனால், அஜித்தின் கார் ரேஸிங் ஆவணப்படம் இந்த ஆண்டு வெளிவர அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related News

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பூசான் திரைப்பட விழா 2026: 'ஆசிய சினிமா ஃபண்ட்' நிதியுதவிக்கு 12 திரைப்படத் திட்டங்கள் தேர்வு

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

பார்க்ஸ்வில்லில் 'சன்செட் சினிமா' திறந்தவெளி திரைப்படக் காட்சி மீண்டும் தொடக்கம்

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

மருத்துவமனை சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை; மான்செஸ்டர் மருத்துவமனையில் நோயாளிகளுக்காக பிரத்யேகத் திரையரங்கம் திறப்பு

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

பிராட்போர்டு திரையரங்குகள்: இந்த வார இறுதியில் வெளியாகும் சூப்பர்கர்ல், டாய் ஸ்டோரி 5 திரைப்படங்கள்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!

கோலிவுட்டை மாற்றியமைக்கும் ஓடிடி; தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரம்!