இந்தி சினிமாவின் பழம் Peru’s நடிகர்களில் ஒருவர் தர்மேந்திரா காலமானார் என வெளிவந்துள்ள செய்தி குறித்து அவரது மகள் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஷாருக்கான், சல்மான் கான் என பல முன்னணி நட்சத்திரங்கள் தர்மேந்திராவைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றனர்.
இதனிடையே இன்று காலை 89 வயதான தர்மேந்திரா காலமானார் என்கிற செய்திகள் பரவத் தொடங்கிய நிலையில், தர்மேந்திராவின் மகளும் பிரபல நடிகையுமான ஈஷா தியோல் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பதிவில், தனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் தமது தந்தை நலமாக வீடு திரும்ப அனைவரும் வேண்டிக் கொள்ளுங்கள் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.








