Oct 3, 2026
Thisaigal NewsYouTube

நகைச்சுவைக் கதாப்பாத்திரத்திற்குத் திரும்பும் நடிகர் சந்தானம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நகைச்சுவைக் கதாப்பாத்திரத்திற்குத் திரும்பும் நடிகர் சந்தானம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சந்தானம்.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர், சிம்புவின் மன்மதன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் காமெடி ரோலில் நடித்து அசத்தினார்.

ஒரு கட்டத்தில் சந்தானம் இல்லாத புதிய படமே இல்லை என்ற அளவிற்கு ஆனது. உச்சத்தில் இருந்தவர் திடீரென ஹீரோ பாதைக்கு மாறி நாயகனாக படங்கள் நடித்து வந்தார்.

இதற்கு இடையில் சிம்பு கூப்பிட்டதால் பார்க்கிங் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது இன்னொரு தகவல் என்னவென்றால் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தில் சந்தானம் காமெடி நடிகராக நடிக்கவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது.

மீண்டும் சந்தானம் காமெடி டிராக் மாறியுள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →