Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த நடிகை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இணைந்த நடிகை

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்தது. பாக்ஸ் ஆபிஸில் சாதனைப் படைத்த ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் ஜெயிலர் 2 படத்தைத் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் இந்தி நடிகை அபேக்‌ஷா போர்வல் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் 'உண்டேகி'(Undekhi), 'ஹனிமூன் போட்டோகிராஃபர்', 'ஸ்லேவ் மார்க்கெட்' ஆகிய வெப் தொடர்களில் மூலம் பிரபலமானவர் நடிகை அபேக்‌ஷா. இவர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் படமாக்கப்பட்டு வருகின்றன. 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →