Oct 6, 2026
Thisaigal NewsYouTube

AK 64 குறித்து தகவல் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
AK 64 குறித்து தகவல் கொடுத்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்

2025ஆம் ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று, அஜித்குமாரின் குட் பேட் அக்லி. இப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகரும், பிரபல இயக்குநருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் ஆதிக் கூட்டணி அமைத்துள்ளார். AK 64 படத்தையும் ஆதிக் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்றாலும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அஜித் தனது கார் ரேஸிங் முடித்து வந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கின்றனர்.

ஏற்கனவே AK 64 படத்தை நான்தான் இயக்குகிறேன் என ஆதிக் உறுதிப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இப்படம் குறித்து அண்மைய தகவல் ஒன்றை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதில், "கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி படம் எடுத்தோம். அடுத்தப் படத்திற்காக வேலைகள், முன் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது" என கூறியுள்ளார்.

மேலும் அவரிடம், AK மாதிரி இல்லாம வேறு யாராவது, விஜய் சேதுபதி போன்ற ஹீரோக்களை வைத்து படம் பண்ணலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "கண்டிப்பாக பண்ணலாம். கதைக்கு என்ன தேவையோ அது மாதிரி செய்யலாம்" என ஆதிக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →