Jan 31, 2026
Thisaigal NewsYouTube
கல்கி படத்தில் தீபிகாவுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகை
சினிமா

கல்கி படத்தில் தீபிகாவுக்கு பதிலாக நடிக்கவிருக்கும் நடிகை

Share:

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடித்து கடந்த 2024ஆம் ஆண்டு வெளிவந்த படம் கல்கி 2898 AD. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்திருந்தார்.

முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கல்கி பாகம் 2 உருவாகவிருக்கிறது. ஆனால், இதற்கிடையில் திடீரென தீபிகா படுகோன் இப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தைக் கொடுத்தது.

தீபிகா படுகோன் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், அவர் நடித்த சுமதி கதாபாத்திரத்தில் வேறு எந்த நடிகை நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, ராஷ்மிகா என பலருடைய பெயர்கள் இதில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது உறுதியாகக் கூறப்படும் தகவல் என்னவென்றால், கல்கி பாகம் 2டில் சுமதி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கப் போகிறார் என்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு படக் குழுவினரிடம் இருந்து வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

சாய் பல்லவி தற்போது Ek Din, ராமாயணா பாகம் 1 ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News