Oct 14, 2026
Thisaigal NewsYouTube

மாபெரும் வெற்றியடைந்த குடும்பஸ்தன் படம்.. படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய கமல் ஹாசன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

2025ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது ‘குடும்பஸ்தன்’ திரைப்படம். அறிமுக இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக அறிமுக நடிகை சான்வி மேகனா நடிக்க, சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த ஜனவரி 24ம் தேதி வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

உலகளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வந்த குடும்பஸ்தன் படத்தை கமல் ஹாசன் அண்மையில் பார்த்துள்ளார். படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் மணிகண்டன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் ஆவார். தனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் மணிகண்டன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →
மாபெரும் வெற்றியடைந்த குடும்பஸ்தன் படம்.. படக்குழுவை நேரி... | Thisaigal News