Oct 13, 2026
Thisaigal NewsYouTube

தற்காப்பு கலை கற்கிறார் நடிகர் விஜய் சேதுபதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மகாராஜா திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து, விடுதலை 2 படத்தில் நடித்திருந்தார். இதில், மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிப்பைத் தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக கலக்கி வந்தார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் விஜய் சேதுபதி தற்காப்பு கலை கற்று வருகிறார். கர்லா கட்டை சுற்றுதல் மற்றும் தற்காப்பு கலையை விஜய் சேதுபதி கற்றுக் கொள்ளும் காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →