Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வெங்கட் பிரபு - சிம்பு : விரைவில் மாநாடு 2 உருவாகிறதா?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெங்கட் பிரபு - சிம்பு : விரைவில் மாநாடு 2 உருவாகிறதா?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இத்திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப் பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்தப் படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில், மாநாடு திரைப்படத்தின் பாகம் 2 உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு கோட் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து படத்தை இயக்க இருக்கிறார். சிம்புவும் அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ள படங்களில் நடித்து முடித்து விட்டு இப்படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in சினிமா →