Jul 22, 2026
Thisaigal NewsYouTube
லியோ' படத்தில் இறந்த கதாப்பாத்திரம் 'பென்ஸ்' படத்தில் உள்ளதா?
சினிமா

லியோ' படத்தில் இறந்த கதாப்பாத்திரம் 'பென்ஸ்' படத்தில் உள்ளதா?

Share:

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பாதையில் உருவாகி வரும் 'பென்ஸ்' திரைப்படம் ஒரு LCU (Lokesh Cinematic Universe) கதை அம்சம் கொண்டது என்பதை ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்திருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'லியோ' படத்தில் உள்ள ஒரு கதாப்பாத்திரம் 'பென்ஸ்' படத்தில் வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'லியோ' படத்தில் விஜயின் சகோதரியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த நிலையில், அந்த படத்தில் அவர் உயிரிழந்து விடுவார். ஆனால், மடோனா செபாஸ்டியன் கேரக்டர் 'பென்ஸ்' படத்தில் உயிருடன் வருவதாகவும், அவரது கேரக்டர் தான் இந்த படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாதவன் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அவர்தான் இந்த படத்தில் பிரதான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இன்னும் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது