Apr 1, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு  சலுகை
தற்போதைய செய்திகள்

பினாங்கு நில வரி குறைப்பு: வணிக மற்றும் தொழில் துறை உரிமையாளர்களுக்கு சலுகை

Share:

பினாங்கில் நில வரி உயர்வால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட தரப்பினருக்கு நில வரி குறைக்கப்படுவதாக முதலமைச்சர் சௌ கோன் இயாவ் அறிவித்துள்ளார். குறிப்பாக, முறையான திட்டமிடல் அனுமதியின்றி வணிக மற்றும் தொழில் துறைக்கு பயன்படுத்தப்படும் பழைய நில உரிமையாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது என்றார் அவர்.

அதன்படி, இத்தகைய நிலங்களுக்கு நகர்ப்புறங்களில் ஒரு சதுர மீட்டருக்கு 70 சென்னும், கிராமப்புறங்களில் 50 சென்னும் புதிய வரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒரு சதுர மீட்டருக்கு 2 ரிங்கிட் 80 சென் முதல் 3 ரிங்கிட் 25 சென் வரை வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வரி குறைப்பு மூலம் சுமார் 800-க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்களின் சுமை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், இந்தச் சலுகையைப் பெறுபவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 50 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி பொருந்தாது என்றும் முதலமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

இனவாரியாக எஸ்.பி.எம். தேர்வு முடிவுகளா? கல்வி அமைச்சு மறுப்பு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

மது போதையில் விபத்து ஏற்படுத்தியவருக்கு எதிராக 10 லட்சம் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்