Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை
தற்போதைய செய்திகள்

ஏப்ரல் முதல் மின்சாரக் கட்டணம் உயர்வு: 215 ரிங்கிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கு கூடுதல் சுமை

Share:

தீபகற்ப மலேசியாவில் மாதம் 600 கிலோவாட் ஹவர் அல்லது 215 ரிங்கிட் 98 சென்னுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் இந்த மாதம் முதல் அதிகரிக்கவுள்ளது.

தேசிய மின்சார வாரியமான டிஎன்பி, எரிபொருள் விலை சரிசெய்தல் முறையின் கீழ் வழங்கி வந்த தள்ளுபடியைக் குறைத்துள்ளதே இதற்குக் காரணமாகும்.

அதன்படி, ஒரு கிலோவாட் ஹவருக்கு வழங்கப்பட்ட 2.15 சென் தள்ளுபடி, தற்போது வெறும் 0.47 சென்னாகக் குறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மாதம் 800 கிலோவாட் ஹவர் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பம், மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் சுமார் 13 ரிங்கிட் 44 சென் கூடுதலாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

ஈரான் போர் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி பாதிப்பால் நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதே இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. வரும் ஜூலை மாதம் முதல் இந்தத் தள்ளுபடி முறை முழுமையாக நீக்கப்பட்டு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும் டிஎன்பி கணித்துள்ளது.

Related News