2025-ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், சிறந்த முடிவுகளைப் பெற்றுச் சாதனைப் படைத்த மாணவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில், ' ஜசெக தெலுக் இந்தான் சிறந்த மாணவர்களுக்கான விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சருமான ஙா கோர் மிங் மற்றும் பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் ஆகியோர் இணைந்து இந்தச் சிறப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளனர். இளைய தலைமுறையினர் கல்வியில் தொடர்ந்து மென்மேலும் சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த விருதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அல்லது அவரது தாய் / தந்தை / காப்பாளர் கண்டிப்பாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.
2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் குறைந்தது 9A (A+, A அல்லது A-) முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
• மாணவரின் அடையாள அட்டையான மைகாட் நகல்.
• தாய் / தந்தை / காப்பாளர் ஆகியோரின் அடையாள அட்டை நகல்.
• எஸ்.பி.எம். தேர்வு முடிவின் நகல்.
"தகுதியுள்ள மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் திரையில் தோன்றும் 'QR குறியீட்டை' ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம்."
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: வரும் 13 ஆம் தேதியாகும்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.









