இரண்டு குழந்தைகளால் பூனை ஒன்று துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்ட புகார்களை திரங்காணு மாநில கால்நடை சேவைத் துறை பெற்றுள்ளது.
இச்சம்பவம் டுங்குன் பகுதியில் நடைபெற்றதாக நம்பப்படுவதுடன், இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதன் இயக்குநர் டாக்டர் அனூன் மான் தெரிவித்துள்ளார்.
விலங்குகளுக்கு எதிரான கொடூரச் செயல்களை தாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இச்சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் பரவிய 18 வினாடி காணொளி ஒன்றில், இரண்டு குழந்தைகள், பூனை ஒன்றை துன்புறுத்துவது போலான காட்சிகள் பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் இணையவாசிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.








