பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி பெசார் அஸ்லான் மான், வெளிநாட்டு சுற்றுலா திட்டம் இரத்து செய்யப்பட்டது தொடர்பில், சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலமாக 1.06 மில்லியன் ரிங்கிட் பெற்றதற்கான நேரடி ஆதாரம் உள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கெடாவாங் டிராவல் & டூர்ஸ் (டபிள்யூ) எஸ்டிஎன் பிஎச்டி மற்றும் ைாடில் டிராவல் & டூர்ஸ் எஸ்டிஎன் பிஎச்டி ஆகிய நிறுவனங்களுக்கு, அஸ்லானின் வெளிநாட்டு பயண முன்பதிவுகளை ரத்து செய்து, பெர்லிஸ் அரசாங்க நிதியில் இருந்து செலுத்தப்பட்ட பணத்தை திருப்பி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது என்று SPRM பணமோசடி தடுப்புப் புலனாய்வுப் பிரிவின் உதவி இயக்குநர் சாப்வான் அர்பாங்கி தெரிவித்துள்ளார்.
இந்த சுற்றுலா திட்டத்தை அஸ்லானின் முன்னாள் மூத்த தனிப்பட்ட செயலாளர் ஹெர்வார்டி ஹாஷிம், அஸ்லானின் உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்ததாகவும், பின்னர் அத்திட்டத்தை ரத்து செய்யும்படி இரு பயண நிறுவனங்களுக்கும் தெரிவிக்க ஹெர்வார்டிக்கு அஸ்லான் உத்தரவிட்டதாகவும் அவர் குற்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில், பொய்யான கோரிக்கைகள் சமர்ப்பித்தது மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து வருமானம் பெற்றது உள்ளிட்ட 10 குற்றச்சாட்டுகள் Azlan-னுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணையில் சாப்வான் சாட்சியம் அளித்துள்ளார்.








