Sep 28, 2026
Thisaigal NewsYouTube
மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்
தற்போதைய செய்திகள்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

Share:

தாமான் பாராமவுண்ட் அருகே எல்ஆர்டி வழித்தடத்தில் மரக்கிளை ஒன்று விழுந்ததன் காரணமாக கிளானா ஜெயா எல்ஆர்டியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மாற்று ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரேபிட் கேஎல் நிறுவனம் அறிவித்துள்ளது.

புத்ரா ஹைட்ஸ் நிலையத்திலிருந்து வரும் இரயில்கள், கிளானா ஜெயா நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் புத்ரா ஹைட்ஸ் நோக்கி திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந்நிலையில், கிளானா ஜெயா மற்றும் தாமான் ஜெயா நிலையங்களுக்கு இடையில் பிளாட்பார்ம் 2-ல் சிறப்பு இரயில்கள் சேவைகள் இயக்கப்படுகின்றன.

கோம்பாக் நிலையத்திலிருந்து வரும் இரயில்கள் தாமான் ஜெயா நிலையத்திலேயே நிறுத்தப்பட்டு, அங்கிருந்து மீண்டும் கோம்பாக் நோக்கி திரும்புகின்றன.

இதனிடையே, பழுதுபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக, ரயில்கள், அதன் நிலையங்களில் அதிக நேரம் நிறுத்தப்படும் என்று ரேபிட் கேஎல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related News