Sep 28, 2026
Thisaigal NewsYouTube
கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்
தற்போதைய செய்திகள்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

Share:

பேராக் மாநிலம்மாலிம் நாவார் பகுதியில் உள்ள எஸ்கே துவாலாங் செக்கா பள்ளி முன்பாக நேற்று ஆறு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இரண்டு சிறார்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மாலை 6.42 மணியளவில் தகவல் பெறப்பட்டதாக கம்பார் மாவட்ட போலீஸ் தலைவர் நஸ்ரி தாவூத் தெரிவித்துள்ளார்.

19 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் பயணம் செய்த ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் இவ்விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பெரோடுவா விவா கார் ஒன்றில் பயணம் செய்த, 7 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறார்கள் தலையில் லேசான காயங்களுக்குள்ளாகினர்.

அவர்களின் 31 வயதான தாயார், மார்பு மற்றும் முழங்கால் பகுதியில் வலியை உணர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News