Mar 16, 2026
Thisaigal NewsYouTube
முதற்கட்ட எஸ்.டி.ஆர் உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படுகின்றது
தற்போதைய செய்திகள்

முதற்கட்ட எஸ்.டி.ஆர் உதவித் தொகை இன்று முதல் வழங்கப்படுகின்றது

Share:

முதற்கட்ட ரஹ்மா உதவித் தொகை எஸ்.டி.ஆர் 8.2 மில்லியன் பயனாளிகளுக்கு இன்று முதல் வழங்கப்படவுள்ளது.

எஸ்.டி.ஆர் தரவு தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பெறுநர்களுக்கு வங்கி கணக்கில் பணமாக செலுத்துவதன் வாயிலாக அந்தந்த தகுதி பிரிவின்படி தொகை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டினை காட்டிலும் இவ்வாண்டு நிதி அமைச்சகம் 200 வெள்ளி அதிகமாகவே 2,500 வெள்ளி மற்றும் அதற்கும் குறைவான வருமான பெறுபவர்களுக்கு முதற்கட்ட எஸ்.டி.ஆர் கட்டணமாக 500 வெள்ளி வழங்கப்படுகின்றது.

2,501 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரையில் வருமான பெறுபவர்களுக்கு 100 வெள்ளி முதல் 300 வெள்ளி வரையில் உதவித் தொகை கிடைக்கபெறும்.

முதியோர்கள், தனிநபர்கள் போன்றவர்களுக்கு 150 வெள்ளி மற்றும் 100 வெள்ளி ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும்.

Related News