Sep 23, 2026
Thisaigal NewsYouTube
செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு
தற்போதைய செய்திகள்

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

Share:

செனாவாங், ஜூலை.28-

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட புதிய கல்வி உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் குறித்து மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று நேரில் வருகை தந்து ஆய்வு நடத்தினார்.

இந்த வருகையின் போது, மித்ரா திட்டத்தின் கீழ் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள நாற்காலிகள், மேஜைகள் மற்றும் நவீன திறன் பலகைகள் போன்ற வசதிகள் குறித்தும், அவற்றை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் அமைச்சர் நேரடியாகக் கேட்டறிந்தார். வகுப்பறைகளில் இத்தகைய நவீன தொழில்நுட்ப மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்குக் கிடைத்திருப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர் என்று டத்தோ ஸ்ரீ ரமணன் விவரித்தார்.

இந்த முக்கிய செயலாக்கப் பணிகள் ஆய்வின் போது, மித்ரா திட்டத்தின் தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன் நாயரும் அமைச்சருடன் இணைந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ்... | Thisaigal News