Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 6 ஆண்டுகளில் 2,214 நேபாளத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 6 ஆண்டுகளில் 2,214 நேபாளத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

Share:

மலேசியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு மே மாதம் வரை 2,214 நேபாளத் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் தெரிவித்துள்ளது.

நேபாளத் தூதரகத் தரவுகளை மேற்கோள்காட்டிய சுஹாகாம் தலைவர் ஹிஷாமுடின் யூனுஸ், தற்கொலை மற்றும் இருதய செயலிழப்பு உள்ளிட்ட நீண்டகால நோய்கள், உயிரிழப்புகளுக்கான முக்கிய காரணங்களில் அடங்குவதாகக் கூறினார்.

இந்த எண்ணிக்கையை வெறும் புள்ளி விவரமாகக் கருதாமல், விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்பாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மலேசியாவிலும் நேபாளத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சுஹாகாம் மற்றும் நேபாள மனித உரிமை ஆணையம் 2028ஆம் ஆண்டு வரை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்துள்ளன.

மலேசியாவில் சுமார் 4 லட்சம் நேபாளத் தொழிலாளர்கள் இருப்பதாக சுஹாகாம் தெரிவித்துள்ளது.

Related News