Sep 23, 2026
Thisaigal NewsYouTube
11 தாதியர்களை ஏற்றிச் சென்ற சுகாதார அமைச்சு வேன் கவிழ்ந்தது
தற்போதைய செய்திகள்

11 தாதியர்களை ஏற்றிச் சென்ற சுகாதார அமைச்சு வேன் கவிழ்ந்தது

Share:

ஈப்போவில் 11 தாதியர்களை ஏற்றிச் சென்ற சுகாதார அமைச்சின் வேன், கார் ஒன்றுடன் மோதியதில் கவிழ்ந்தது. இதில் மூவர் காயமடைந்தனர்.

இன்று காலை சுமார் 7.25 மணியளவில் ஜாலான் சுல்தான் இஸ்கந்தர், ஜாலான் சுல்தான் யூசோஃப் சந்திப்பில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹம்மட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.

தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள சுல்தான் அஸ்லான் ஷா சுகாதார அமைச்சு பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த வேன், பெக்கான் பாருவிலிருந்து வந்த போது, போக்குவரத்து விளக்கை மதிக்காமல் சந்திப்புக்குள் நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கார் மீது மோதியதில் வேன் கவிழ்ந்தது. காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். ஓட்டுநர் உட்பட மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.

Related News