Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நீல நிறமான சுங்கை பேராக்: புத்ராஜெயா தலையிட வேண்டும் – பிபிஎம்
தற்போதைய செய்திகள்

நீல நிறமான சுங்கை பேராக்: புத்ராஜெயா தலையிட வேண்டும் – பிபிஎம்

Share:

பேராக் மாநிலத்தின் ஜெரிக் பகுதியில் உள்ள சுங்கை பேராக் மற்றும் சுங்கை ருய் ஆறுகளின் நீர் நிறம் மாறிய விவகாரத்தில் புத்ராஜெயா தலையிட வேண்டும் என்று பார்ட்டி பங்சா மலேசியா கோரியுள்ளது.

மாநில அரசு இந்த விவகாரத்தை உரிய முறையில் கையாளத் தவறிவிட்டதாக பிபிஎம் சுற்றுச்சூழல் பிரிவுத் தலைவர் அப்துல் ரசாக் இஸ்மாயில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுங்கை பேராக் நீல நிறமாக மாறிய நிலையில், சுங்கை ருய் அண்மையில் கனமழைக்குப் பிறகு ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆறுகளில் ஆர்சனிக் உள்ளிட்ட ஆபத்தான கனிமங்கள் அதிகளவில் இருப்பதாகக் கூறிய அவர், மாசுபாட்டுக்கான காரணத்தையும் பொறுப்பான தரப்பையும் அரசாங்க அமைப்புகள் இதுவரை தெளிவாக அடையாளம் காணவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.

எனினும், மாநில அரசு மேற்கொண்ட ஆய்வில், மழைநீர் ஓட்டம், கனிமத் துகள்கள் மற்றும் நீரோட்ட மாற்றம் ஆகியவை இணைந்ததே சுங்கை பேராக் நீர் நீலமாகத் தோன்றியதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News