Sep 23, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா தேர்தல்: வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க பக்காத்தான் ஹராப்பான் திட்டம்
தற்போதைய செய்திகள்

மலாக்கா தேர்தல்: வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க பக்காத்தான் ஹராப்பான் திட்டம்

Share:

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை, வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு ஒரு வாரம் முதல் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அஸ்மான் அபிடின் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வேட்பாளர்களை இறுதி நேரத்தில் முடிவு செய்யாமல், தேர்தலுக்கான தயாரிப்புகளை முன்கூட்டியே மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

வேட்பாளர் தேர்வில், தொகுதிக் கிளைகள், மாநிலத் தலைமை மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் முன்வைக்கும் பட்டியல்கள் பரிசீலிக்கப்படும் என்றும், இறுதி முடிவு கட்சியின் உயர்மட்டத் தலைமையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அஸ்மான் தெரிவித்தார்.

கோலா லிங்கி சட்டமன்றத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஸியாரா காசே நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

Related News