Sep 23, 2026
Thisaigal NewsYouTube
நஜிப் இல்லம் முன் ஆறாவது நாளாக குவிந்துள்ள ஊடகங்கள்
தற்போதைய செய்திகள்

நஜிப் இல்லம் முன் ஆறாவது நாளாக குவிந்துள்ள ஊடகங்கள்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரஸாக்கின் வீட்டுக் காவல் தொடர்பான புதிய தகவலுக்காக, கோலாலம்பூர் லங்காக் டூத்தா பகுதியில் உள்ள அவரது இல்லம் முன் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகப் பணியாளர்கள் ஆறாவது நாளாகக் காத்திருக்கின்றனர்.

இன்று காலை 8 மணி முதல் செய்தியாளர்கள் அங்கு திரண்டிருந்த நிலையில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து காத்திருந்தனர்.

மாலை 3 மணி நிலவரப்படி, நஜிப்பின் இல்லத்திலிருந்து யாரும் வெளியேறியதாகவோ, உள்ளே சென்றதாகவோ எந்த நடமாட்டமும் காணப்படவில்லை.

இதனிடையே, நஜிப்பின் வீட்டுக் காவலுக்கான செயல்பாட்டு நடைமுறையில் வருகையாளர்கள், பாதுகாப்பு மற்றும் அவரது நடமாட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என சட்டத்துறைத் தலைமை அதிகாரி டான் ஸ்ரீ முகமட் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.

Related News