Aug 7, 2026
Thisaigal NewsYouTube
செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

Share:

ஷா ஆலாம், ஜூலை.28-

செத்தியா ஆலாம் (Setia Alam) பகுதியில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஷா ஆலாம் மாநகர மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டுள்ளார்.

நில ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நிலம் அரசுக்குரியதா அல்லது தனியார் நிலமா என்பதை ஆராய்ந்து நில உரிமையாளர்களுக்கு உடனடி நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார். கடந்த ஏப்ரல் மாதம் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலும், அங்கு மீண்டும் நூற்றுக்கணக்கான சட்டவிரோதக் குடியிருப்புகள் உருவானது குறித்து குடிநுழைவுத்துறை விசாரித்து வருகிறது என்று அமிருடின் தெரிவித்தார்.

இதனிடையே இவ்விவகாரம் தொடர்பாக உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டதும், மற்ற அமலாக்க முகமைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த கூட்டுச் சோதனை நடத்தப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி