May 22, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 40 லட்சம் தொழிலாளர்கள் முதுமை காலத்தில் வறுமையில் தள்ளப்படலாம்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 40 லட்சம் தொழிலாளர்கள் முதுமை காலத்தில் வறுமையில் தள்ளப்படலாம்

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

மலேசியாவில் ஓய்வூதியம் மற்றும் அதிகாரப்பூர்வ பணி ஓய்வுத் திட்டத்தில் சம்பந்தப்படாத சுமார் 40 லட்சம் பேர், தங்கள் முதுமை காலத்தில் எவ்வித சேமிப்புமின்றி, வறுமையில் தள்ளப்படலாம் என்று தொழிலாளர் சேமநிதி வாரியமான EPF எச்சரித்துள்ளது.

இணையம் சார்ந்த gig ( கிக் ) தொழிலில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் சொந்த தொழில் செய்கின்றவர்கள் போன்ற அமைப்பு சாரா தொழில்முறையினர், சந்திக்கக்கூடிய மிகப்பெரிய சவால்களை மத்தியில் நாட்டில் ஏற்பட்டுள்ள நடப்பு தொழில் மாற்றங்களினால் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம் என்று EPF தலைவர் டான் ஸ்ரீ அஹ்மத் பத்ரி முகமட் ஜாஹிர் தெரிவித்துள்ளார்.

தங்களின் முதுமை காலத்தில் தொழிலாளர்கள் எதிர்நோக்கக்கூடிய இந்த பிரச்னையையும், சவாலையும் கையாளும் முயற்சியாக EPF- பில் சுய விருப்பத்தின் பேரில் மக்கள் சந்தாதாரராக சேர்வதை ஊக்குவிப்பதற்கு I- Saraan ( ஐ- சாரான் ) என்ற திட்டத்தின் வாயிலாக தொழில்முறை சாரா சேமிப்புத்திட்டத்தை உருவாக்கி, அவர்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு உதவும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக டான் ஸ்ரீ அஹ்மத் பத்ரி தெரிவித்தார்.

ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாதவர்கள், EPF- பில் தங்களுக்கென்று ஒரு வாழ்நாள் சேமிப்பு இருந்தால் மட்டுமே அது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சமூகவில் பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

எனவே 40 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் முதுமைக்காலத்தில் வறுமையில் தள்ளப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய திட்டத்தை EPF ஆராய்ந்து வருவதாக டான் ஸ்ரீ அஹ்மத் பத்ரி விளக்கினார்.

Related News