Dec 2, 2025
Thisaigal NewsYouTube
ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது

Share:

கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, கோழிப்பண்ணை உரிமையாளருக்கு வியப்பை தந்த வேளையில் மலைப்பாம்பு ஒன்றின் வருகையின் காரணமாக கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.


தெமர்லோ, லஞ்சா​ங்கில் நேற்று மாலையில் கோழிப்பண்ணை அருகில் 80 கிலோ எடை கொண்ட ராட்ஷச மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது மூலம் கோழிகளை அந்த மலைப்பாம்பு விழுங்கி வந்தது தெரியவந்தது.


அலையா விருந்தாளியாக அந்த ராட்ஷச மலைப்பாம்பின் வருகையை கண்ட முகமட் இக்வான் அப்துல் ரசாக் என்ற 29 வயதுடைய கோழிப் பண்ணை உரிமையாளர், ​தீயணைப்பு,​மீட்புப்படைக்கு தகவல் அளித்தது மூல​ம் அந்த மலைப்பாம்பு வளைத்து பிடிக்கப்பட்டது.

Related News