Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தற்போதைய செய்திகள்

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

Share:

'கெங் அடிக் லாபு பெசார்' என்றழைக்கப்படும் கொள்ளைக் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாக, இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் மீது பாட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கானது உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருவதால், நீதிபதி ரோஸ்லான் ஹமீத் முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களிடமிருந்து எந்த வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் நூர் ஆல்யா நாதிரா சே ஹசான் வயது 22, நூருல் நடாஷா முகமட் சுக்ரி வயது 23, முகமட் சாமெரின் ஷாரோம் வயது 35, முகமட் ஐசாட் ரோஸ்மட் வயது 28, ஐசல் அபு பக்கர் வயது 23, முகமட் ஜைனி யூசோஃப் வயது 27, முகமட் அசிசி அப்துல் கபார் வயது 22, முகமட் பித்ரி அப்துல் கரீம் வயது 31 ஆகியோர் ஆவர்.

இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு, மார்ச் முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை, பட்டர்வொர்த், ஜாலான் கம்போங் காஜா, விஸ்டா பெர்டானாவில் அமைந்துள்ள கெங் அடிக் லாபு பெசார் கும்பலின் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

இந்த வழக்கு, 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்களுக்கான சிறப்பு நடவடிக்கைகள் சட்டம் அல்லது சொஸ்மா மற்றும் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு கீழ் வருவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு