Sep 24, 2026
Thisaigal NewsYouTube
  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது
தற்போதைய செய்திகள்

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

Share:

உலகளாவிய மற்றும் பிராந்திய முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று வர்த்தக முடிவில் வலுவடைந்துள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்களின் சாதகமான போக்கு இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இன்று மாலை 6 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4 ரிங்கிட் 06 சென் ஆக உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இது 4 ரிங்கிட் 08 சென் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 72 டாலர் 69 சென் ஆகக் குறைந்துள்ளது ரிங்கிட்டின் இந்த முன்னேற்றத்திற்குத் துணையாக இருந்ததாக பேங்க் முஅமலாத் மலேசியா பெர்ஹாட் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முகமது அப்சானிஜாம் அப்துல் ரஷித் தெரிவித்துள்ளார்.

Related News