Jun 29, 2026
Thisaigal NewsYouTube
செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் செங்கராங் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆன் அபு பக்கர், அத்தொகுதியின் முன்னேற்றத்திற்காக 6 முக்கிய உறுதிமொழிகளைத் தனது தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அனைத்து கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குத் தரமான இணையச் சேவை, குற்றச் செயல்களைக் குறைக்கக் கிராமப்புறச் சாலை விளக்குகளை மேம்படுத்துதல், மற்றும் வெள்ளப் பிரச்சினையைத் தடுக்கச் சாலை மற்றும் வடிகால் அமைப்புகளைத் தரம் உயர்த்துதல் ஆகியவற்றை அவர் முதன்மைப் படுத்தியுள்ளார்.

மேலும், உள்ளூர் வணிகர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு டிவிஇடி மற்றும் செயற்கை நுண்ணறிவான ஏஐ சார்ந்த கல்வி வாய்ப்புகளை வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் விடுபடாமல் கிடைக்கச் மக்கள் சேவை மையம் வலுப்படுத்தப்படும் என்றும், செங்கராங் தொகுதியின் சிறந்த எதிர்காலத்திற்காகத் தனக்கு வாக்களிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News