Nov 21, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் வெள்ள பாதிப்பு அதிகரிப்பு: பேராக் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் குறைந்து வருகின்றது

சிலாங்கூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி, 522 குடும்பங்களைச் சேர்ந்த 1,869 பேர் 13 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய நாள் இரவு இந்த எண்ணிக்கையானது 482 குடும்பங்களைச் சேர்ந்த 1,764 பேராக இருந்தது.

இதில், செகோலா கெபாங்சாஆன் டத்தோ மஹாராஜா லேலேவில் முகாமில் அதிகபட்சமாக 401 பேரும், எஸ்கே பாரிட் மஹாங் முகாமில் 365 பேரும், எஸ்ஆர்ஏ புக்கிட் கூச்சிங் முகாமில் 224 பேரும் தங்கியுள்ளனர்.

மேலும், மற்ற நிவாரண முகாம்களிலும் நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்துள்ளதாக சமூக நலத்துறையின் பேரிடர் தகவல் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பேராக் மாநிலத்தில் வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதுடன், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரே ஒரு நிவாரண முகாம் மட்டுமே தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →