Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தல் விவாதங்கள் மாநில அரசியல் கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிய ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஒன் ஹஃபிஸ் காசி, டாக்டர் மஸ்லி மாலிக்-உடன் விவாதிக்கப் பயப்படுகிறார் என அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஜர்காஷி சாடியுள்ளார்.

அரசியல் கொள்கைகளையும் வாதங்களையும் முன்வைக்க விவாதம் ஒரு சிறந்த தளம் என்றும், இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் தலைவர்களை மதிப்பிட முடியும் என்றும் புவாட் ஜர்காஷி கூறினார். ஒன் ஹஃபிஸ் பயந்தால் தமக்கு பதிலாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மல் சலே-ஐ அனுப்பலாம் அல்லது தன்னுடனாவது விவாதிக்க வரலாம் என அவர் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, புத்ரி வங்சா தொகுதிப் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் மஸ்லி மாலிக் விவாதத்திற்குத் தயார் என அறிவித்திருந்தார். ஆனால், திறந்தவெளி விவாதங்கள் தேவையற்ற அசாதாரண சூழலை உருவாக்கும் எனக்கூறி ஒன் ஹஃபிஸ் அதனை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

.

Related News