Jul 18, 2026
Thisaigal NewsYouTube
நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்
தற்போதைய செய்திகள்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

Share:

ஜோகூர் புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் மோசமான சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை நேரில் அறிந்துகொள்ள, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக்: நெட்டிசன்களின் சவாலை ஏற்று 'மைவி' காரில் பயணித்துள்ளார்.

கம்பங் மெலாயு தெப்ராவ் முதல் உலு திராம் வரையிலான சாலைகளில் காரை அவரே ஓட்டிச் சென்று ஆய்வு செய்த மஸ்லீ மாலிக், சாலைகள் மேடு பள்ளங்களாக படகு சவாரி செய்வது போல அதிர வைப்பதாகக் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தின் தீவிர வளர்ச்சிக்கு ஏற்ப சாலைகளின் தரம் உயர்த்தப்படாததே இந்த இடறுக்கும், நெரிசலுக்கும் காரணம் என்றும், தாம் வெற்றி பெற்றால் பொதுப்பணித்துறை மற்றும் நகராண்மைக்கழகப் பொறுப்பாளர்களுடன் இணைந்து இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வரும் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஸ்லீ மாலிக் போட்டியிடும் புத்ரி வங்சா தொகுதியில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Related News