Jun 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது
தற்போதைய செய்திகள்

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

Share:

கெடா மாநிலம் சுங்கைப்பட்டாணி, தாமான் கெம்பாஸ் குடிருப்புப் பகுதியிலுள்ள வீட்டு ஒன்றின் முன், இன்று அதிகாலை, 30 வயது இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அதே இடத்தில், அவரது சகோதரர், கைகள் துண்டிக்கப்படும் வரையில் தாக்கப்பட்டதாக, கோலாமூடா மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம், நேற்று நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 2.00 மணியளவில் நிகழ்ந்துள்ளதாகவும், சம்பவ நடந்த இடத்தில் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹன்யான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக 17 முதல் 21 வயது மதிக்கத்தக்க இரு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் இருவர் பதின்ம வயது தம்பதியர் என்றும், மற்றொருவர் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகேயுள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் என்றும் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார்.

இக்கொலைச் சம்பவமானது குற்றவியல் சட்டம் பிரிவு 302 மற்றும் பிரிவு 326 ஆகியவற்றின் கீழ் வகைப்படுத்தப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனிடையே, கொலைச் செய்யப்பட்ட இளைஞனின் உடல் பிரேத பரிசோதனைக்காக Sultan Abdul Halim மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு