Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
தற்போதைய செய்திகள்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

Share:

வறண்ட காலம் காரணமாக, ரந்தாவ் பாஞ்சாங், சுங்கை கோலோக் எல்லையில், ஏரிகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மலேசிய ஆயுதப் படையான MAF ஒத்துழைப்புடன் பொது செயல்பாட்டுப் படையான GOF, அங்கு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கடத்தப்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்றும், கடத்தல்காரர்கள் தற்போதைய புவியியல் நிலைமைகளைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், உளவுத்துறை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், போலீஸ் விமானப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சின் இரண்டு ட்ரோன்கள் எல்லையை தினமும் கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாகவும் முகமட் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு